வாசிப்பது எப்படி ஆசிரியர் : செல்வேந்திரன்



தினம் ஒரு புத்தகம்*

நாள்:170

தேதி:12-01-2023

புத்தகம் எண்ணிக்கை:170

புத்தகத்தின் பெயர் : வாசிப்பது எப்படி 

ஆசிரியர் : செல்வேந்திரன் 

விலை : 100 

பக்கங்கள் : 80

பதிப்பகம் : எழுத்து பிரசுரம்


 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


* நடிகர் கமல் அவர்கள் பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்திய புத்தகங்களில் ஒன்று இந்த வாசிப்பது எப்படி என்ற புத்தகமாகும்.           

 

* முயலைப் பிடிக்க நினைத்தால் அதன்  பின்னால் ஓடாதே முயல் எங்கே ஓடும் என கணித்து அங்கே காத்திரு  என்ற முதல் பக்கத்தில் உள்ள ஆப்பிரிக்க பழமொழியே இந்த நூலை வாசிக்கத் தூண்டுகிறது.                       

 

 * இந்தப் புத்தகத்தில் மொத்தம் 23 தலைப்புகள் உள்ளன எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு "நமக்கு ஏன் புத்தகங்கள் "என்ற தலைப்பே ஆகும் 

 

*இந்த புத்தகத்தின் சிறப்புகளில் ஒன்று இந்த புத்தகத்தின் இறுதியில் படிப்பதற்கு 50 புத்தகங்களின் தலைப்பு ஆசிரியர்களின் பெயருடன் பரிந்துரையாக அளிக்கப்பட்டுள்ளது 50 புத்தகங்களும்  மிக அருமையான புத்தகம்

 

*இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது.

 

*அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு முன் வைக்கிறது. 

 

*வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது.

 

*சின்ன சின்ன பகுதிகளாக பொருத்தமான தலைப்பும் வைத்து எழுதி இருப்பது அருமையாக உள்ளது.

 

* குழந்தைகள் மீது அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த நூலை அவர்களுக்கு வாசித்துக் காட்டி இதில் உள்ள நல்கருத்துக்களை அவர்களுக்கு கூறலாம்.

 

*மாணவர்கள் நலனில் அக்கறை உள்ள ஆசிரியர்கள் இந்த நூலை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களுக்கு வாசிப்பை உருவாக்கலாம்.

 

*உலகிலேயே மிக அதிகம் வாசிக்கும் நாடு எது? அமெரிக்காவோ இங்கிலாந்தோ சீனாவோ அல்ல இந்தியா தான் மிக அதிகம் வசிக்கும் நாடு சராசரி இந்தியர்கள் ஒரு வாரத்தில் சுமார் பத்து மணி 45 நிமிடம் வாசிக்கிறார்கள் என்பது சர்வதேச அளவிலான புள்ளி விவரம் 

 

*நகர்ப்புற மாணவர்களை விட கிராமப் பள்ளி மாணவர்கள் அதிகமாக வாசிக்கிறார்கள் என்பது புள்ளி விவரம்.

 

*மாணவர்களில் 2 சதவீதத்திற்கு குறைவானர்களே  தங்களது பாடத்தை தாண்டி நாளிதழ்களையோ அல்லது அன்றாடம் செய்திகளையோ வாசிக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம் 

 

*உண்மையான சமூக இழிவு என்பது அறியாமையே மனிதன் பண்பட இன்னும் மேம்பட்டவனாக மாற தான் வாழும் பூமியை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கையளிக்க அவன் வாசித்தே ஆக வேண்டும் 

 

*ஏன் வாசிக்க வேண்டும் என்ற கேள்விக்கு என்னுடைய முதன்மையான பதில் கூமுட்டையாக இல்லாமல் இருப்பதற்கு நீ வாசித்து தான் ஆக வேண்டும் ராஜா என்பதே என்பதில் 

 

*பொதுவாக வாசிப்பை மூன்று வகையாக பிரித்துக் கொள்ளுவது புரிதலுக்கு உதவும்

 

*வாழ்க்கைக்கு உதவுகிற வாசிப்பு பாட புத்தகங்கள் ,தொழில்நுட்ப நூல்கள் ,துறை சார்ந்த நூல்கள் ,நாளிதழ்கள் ,இணையதளங்கள் இவ்வகைக்குள் வரும் 

 

*வாழ்க்கையை புரிந்து கொள்ள உதவுகிற வாசிப்பு அல்லது வாழ்க்கை அனுபவங்களை பெருக்கிக் கொள்ள உதவும் வாசிப்பு இலக்கிய ஆக்கங்கள் ,தத்துவ நூல்கள் ,ஆன்மீக ஞான நூல்கள், வாழ்க்கை வரலாறுகள் ,பயண நூல்கள் .

 

*பொழுதுபோக்கு வாசிப்பு வணிக இலக்கியம் ,காமிக்ஸ் புத்தகங்கள், வார இதழ்கள், சமூக ஊடக ஊடகங்கள் ஆகியவைக்குள் வரும்.

 

  *தனித்திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் அதை வெளிக்காட்டவும் வாசிப்பு வாய்ப்பளிக்கிறது.

 

*புத்தகங்கள் அளிக்கும் வாசிப்பு  என்பது ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கை வாழும் நிகர் அனுபவம் வாழ்நாள் முழுக்க உடன் வரக்கூடியது 

 

* வாழ்க்கையை புரிந்து கொள்வதற்கும் பெருக்கிக் கொள்வதற்கும் வழி காட்டுவது வாசிப்பு ஆகும்.

 

*வாசித்த நூலை பற்றிய உங்களது கருத்தை ஒரு செரிமான கட்டுரையாக எழுதுவது சிறந்த பயிற்சி நீங்கள் வாசித்தவற்றை உங்களுக்குள் தொகுத்து வைத்துக் கொள்ள இப்ப பழகும் உதவும் 

 

* வாசிப்பதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்னை பொறுத்தவரை இலக்கற்ற வாசிப்பு அர்த்தமற்றது இன்று இருக்கும் அன்றாட நெருக்கடியில் ஒருவனுக்கு வாசிக்க கிடைக்கும் நேரம் மிகக் குறைவானது அதனை பயனற்ற பயனற்ற நூல்களை வாசித்து வீணடிக்க கூடாது.

 

*வாசிப்பை வளமுள்ளதாக அர்த்தமுள்ளதாக மாற்ற இந்த நூல் உதவும்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments