உடலாளுமன்றம் ஆசிரியர் : முனைவர்.என்.மாதவன்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:174

தேதி:16-01-2023

புத்தகம் எண்ணிக்கை:174

புத்தகத்தின் பெயர் :உடலாளுமன்றம்

ஆசிரியர் : முனைவர்.என்.மாதவன்

பக்கங்கள் : 104

விலை : 100

பதிப்பகம் : பாரதிபுத்தகாலயம்

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


* உடலாளுமன்றம் என்ற இந்தப்புத்தகத்தில் மொத்தம் 30 கட்டுரைகள் உள்ளன 

 

*தினமலரின் பட்டம் என்ற இணைப்பில் தொடராக வெளிவந்தது ஆகும் தொடர் பகுதிகளைத் தொகுத்து புத்தகமாக வழங்கி உள்ளார் 

 

*எனக்குப் மிகவும் பிடித்தக்கட்டுரை லப்டப் ரகசியம் 

 

*இளம் பருவம் மாணவர்களுக்கு அறிவியலை அறிவியலாக கூறினால் புரிதலில் சிரமம் ஏற்படுகிறது அப்படிப்பட்ட சிரமத்தைத் தவிர்ப்பதற்காக அறிவியலை மிக எளிமையாக கதைப்போல கட்டுரைப் போல வழங்கியுள்ளார் மிக அருமையான முயற்சி 

 

*மனதை அனைத்து கட்டுரைகளும் கவர்கிறது

 

*மேலை நாடுகளில் இளையோருக்கு நூல்கள் பல எழுதப்பட்டுள்ளது ஆனால் தமிழகத்தில் இளையோருக்கென நூல்கள் மிக குறைவாக தான் எழுதப்பட்டுள்ளது 

 

*முனைவர் என்.மாதவன் அவர்கள் இளையோர் வயதுக்கு ஏற்ப முதிர்ச்சிக்கு ஏற்ப மொழி திறனுக்கு ஏற்ப மிகச்சிறப்பாக எழுதியுள்ளார் 

 

*உடலின் ஒவ்வொரு பாகங்கள் பற்றிய விளக்கம் அப்பாகங்களின் பணிகள் அப்பாகங்கள் சிறப்பாக செயல்பட என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் மிக அழகாக எழுதியுள்ளார் 

 

*இந்தப்புத்தகத்தை படிக்கும் போது உடலைப் பற்றிய பல்வேறு புரிதல்கள் உங்களுக்கு கண்டிப்பாக புரிந்திருக்கும் 

 

*ஒரு நிமிடத்திற்கு 3 முதல் 6 முறை இமைக்க வேண்டும் அப்படி இமைத்தால்தான் கண்ணுக்கு கிடைக்கும் திரவம் கிடைக்கும் 

 

*நாக்கில் சுமார் 3000 முதல் 8000 வரை சுவை அரும்புகள் உள்ளன 

 

*ஆண்களின் நாக்கு சுமார் 8.5 சென்டிமீட்டர் நீளம் பெண்களின் நாக்கு சுமார் 8 சென்டிமீட்டர் நேரம் இருக்கும் 

 

* சிறுகுடலின் நீளம் சுமார் 20 அடி சிறுகுடலை சுற்றி ஐந்து அடி நீளம் கொண்ட பெருங்குடல் இருக்கிறது 

 

*கணையம் சுமார் 15 சென்டிமீட்டர் நீளமும் 100 கிராம் எடையும் மட்டுமே உடையது 

 

*கணையத்தில் இருக்கும் லாங்கர்ஹான் திட்டுகள் தான் இன்சுலினை உற்பத்தி செய்கிறது 

 

*உடலின் பாகங்கள் பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் மிக எளிமையாக அனைவருக்கும் புரிந்து கொள்ளும்படி புத்தகத்தில் உள்ளது 

 

*கண்டிப்பாக இந்தப்புத்தகத்தை இளைஞர்கள் படித்தால் சிறப்பாக இருக்கும் சிறப்பாக எழுதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

     

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments