சமயங்களில் அரசியல் ஆசிரியர் : தொ.பரமசிவன்



தினம் ஒரு புத்தகம்*

நாள்:173

தேதி:15-01-2023

புத்தகம் எண்ணிக்கை:173

புத்தகத்தின் பெயர் : சமயங்களில் அரசியல் 

ஆசிரியர் : தொ.பரமசிவன் 

பக்கங்கள் : 60 

விலை : 55 

பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

*சிறு சிறு தலைப்புகள் இல்லாமல் தொடர்ச்சியாக எழுதப்பட்ட கட்டுரையாகும் 

 

*சமயங்கள் குறித்த பல்வேறு வகையான தகவல்களை எழுதியுள்ளார் 

 

*கட்டுரையில் பல்வேறு பாடல்கள் நூலின் பெயர் மற்றும் பாடலின் எண்ணுடன் ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளது 

 

*தமிழக வரலாற்றில் நிறுவனம் அமைக்கப்பட்ட முதல் இயக்கமாக பக்தி இயக்கத்தையே குறிப்பிடலாம் 

 

*பக்தி இயக்கம் என்பது சமண பௌத்த மதங்களுக்கு எதிராக பிறந்த ஒரு இயக்கமாகும் 

 

*சமண பௌத்த மதங்களும் நிறுவன மதங்களும் மதங்கள் தான் என்றாலும் ஓர் இயக்கத்திற்கு தேவையான வேகமான உணர்ச்சி அந்த மதங்களின் மொழி வெளிப்பாடுகளிலும் பிற வெளிப்பாடுகளிலும் காணப்படவில்லை 

 

*சமணத் துறவிகள் மக்களிடையே இருந்து அதாவது வாழ்விடங்களை விட்டு தள்ளி இருப்பதற்கு வாழ்ந்ததற்கு அவர்களது நிர்வாணத்துறவு ஒரு காரணம் 

 

*சமண பௌத்த சமயத்துறவிகள் செல்லும் இடங்களில் பிற சமயத்துறவிகளிடம் விவாதம் செய்தனர் பிற்காலத்தில் அதுவே பட்டிமன்றம் ஆனது 

 

*பட்டி என்ற சொல்லுக்கு எல்லை இடப்பட்டது என்று பொருள் 

 

*சமண பௌத்த சமயங்களில் வீழ்ச்சிக்கு காரணம் காரணிகள் பல இருந்தாலும் பெண்கள் குறித்த பார்வைகளும் கலைகள் பற்றிய பார்வைகளும் குறிப்பிட வேண்டும் 

 

*சிவபெருமான் ஏந்தி உள்ள கபாலத்திற்கு பிரம்ம கபாலம் என்று பெயர் 

 

*பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை கிள்ளி அவனை நான்முகன் ஆக்கிய சிவபெருமான் அந்த கபாலத்தையே பிச்சைப்பாத்திரம் ஆக்கினார் என்பது கதை ஆகும் 

 

*சோழ அரசு பேரரசாக உருவாகிற போது சைவ சமயம் அரசு மதம் ஆயிற்று அது திருநாவுக்கரசர் கட்டமைத்த தமிழ் சைவமாக அமையவில்லை மாறாக திருஞானசம்பந்தர் கட்டமைத்த வேள்வியினைக் கொண்ட வைதீக சமயமாக இருந்தது 

 

*தமிழ்நாட்டில் சித்தர் இயக்கம் மூன்று நிலைகளைக் கொண்டது வேத எதிர்ப்பு ,புலால் உணர்வு எதிர்ப்பு ,கோயில் எதிர்ப்பு என்பதையே அந்த மூன்று 

 

*சமயங்களில் அரசியல் இந்த நூல் ஒவ்வொரு சமயத்தின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சிக்கான காரணங்களை ஆதாரப்பூர்வமாக விளங்குகிறது 

 

*பல்வேறு சமயங்களில் இருந்த கருத்து மோதல்களையும் விவரிக்கிறது 

 

*சமயங்களின் தாக்கங்கள் தமிழகத்தில் ஏற்பட்ட விளைவுகளை அறிந்து கொள்ள கண்டிப்பாக படிக்க வேண்டிய நூலாகும்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments