திருக்குறள் புதிய உரை ஆசிரியர்: பொறிஞர்.ஹெலினா



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:175

தேதி:17-01-2023

புத்தகம் எண்ணிக்கை:175

புத்தகத்தின் பெயர் :திருக்குறள் புதிய உரை 

ஆசிரியர்: பொறிஞர்.ஹெலினா

விலை:150 

பக்கங்கள்:272 

பதிப்பகம் : விசை வெளியீடு 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


       *திருக்குறளுக்கு புதிய உரை என்ற தலைப்பில் இந்தப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது 

 

*புத்தகத்தின் முதல் பக்கம் உள்ள ஆசிரியரின் பெயருக்கு முன்னால் உள்ள பட்டம் "பொறிஞர்"  என்று தமிழ்ப்பெயரில் இருக்கிறது தமிழ் மீது ஆசிரியர் கொண்ட பற்று தெரிகிறது இந்தப்பெயரே நம்மை புத்தகத்தை நோக்கி படிக்க ஈர்க்கிறது.

 

* மிக அழகிய கவித்துவமான அட்டைப்படம் திருவள்ளுவரின் முகம் 

பார்ப்பதற்கு மனதைக்கவர்கிறது

 

*திருக்குறளுக்கு பல தெளிவுரைகள் படித்தபோது ஒரு பெண்மணி எழுதிய தெளிவுரை என்னும்போது இந்த புத்தகத்தின் மீது மேலும் மதிப்பு கூடுகிறது 

 

*முதல் குறளின் விளக்கமே நம்மை தொடர்ந்து இந்தப்புத்தகத்தை படிக்கத் தூண்டுகிறது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது புலனாகிறது 

 

*எழுத்துக்கள் இயங்குவதற்கு மூல காரணமாய் விளங்கும் அகரத்தைப் போல உலகம் முழுவதும் மூலகாரணமாய் இயங்குபவன் இறைவன் 

 

*மனதைக் கவரும் விளக்கவுரை அறக்கடலாக விளங்கும் அருளாளன் இறைவனின் திருவடிகளைப்பின்பற்றி வாழ்பவர்களை அறம் அல்லாத பாவம் ஒருபோதும் நிறுத்தவே நிற்காது 

 

*வார்த்தைகளை மிக அழகாய் கையாண்டு எழுதியுள்ளார் படிப்பதற்கும் மிக எளிமையாக உள்ளது 

 

*திருக்குறளை போன்று விளக்கத்திலும் எதுகை, மோனை ,இயைபு அழகாகப்பயன்படுத்தி உள்ளார் 

 

*இல்வாழ்க்கையின் இரண்டு கண்கள் அன்பும் அறனும் அவையே இல்வாழ்க்கைக்கு பண்பும் பயனும் தருகிறது 

 

*மனதைக்கவர்ந்த விளக்கம் நற்பண்புகள் நிறைய பெற்ற மனைவியே பெருமைக்குரியவள் அதற்கு அழகு செய்யும் அணிகலன் குழந்தை செல்வங்கள் 

 

*குறளின் விளக்கமே பல குறல்களுக்கு கவிதை போல் எழுதியுள்ளார்

 

*ஒருவர் செய்த நன்மைகளை ஒருபோதும் மறக்கக்கூடாது ஆனால் அவர் செய்த தீமைகளை மறந்துவிடலாம்

 

*எந்த ஒரு உயிரையும் கொல்லாமைஅறம் ஆகும்

 

* உயிர்களை கொலை செய்தால் அறம் ஆகாது

 

*பெரியவர்களின் கோபத்துக்கு ஆளானவர்கள் எங்கு சென்று எப்படி ஒளிந்து கொண்டாலும் அவர்கள் பிழைக்க முடியாது 

 

*கோடிக்கு அதிகமான அளவிற்கு பணம் கொடுத்தாலும் நல்ல குடியில் பிறந்தவர்கள் ஒழுக்கக்கேடான செயலைச்செய்ய மாட்டார்கள்  

 

*எளிமையான வார்த்தைகளில் கவிதை போல் பொருள் எழுதியுள்ளார் படித்த உடனே புரிந்து கொள்ளக்கூடிய வகையில் திருக்குறளுக்கு பொருள் உரை மிக எளிமையாக இருக்கிறது கண்டிப்பாக மாணவர்கள் மற்றும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments