சிதம்பர நினைவுகள் *தினம் ஒரு புத்தகம்* - சிதம்பர நினைவுகள்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:162

தேதி:04-01-2023

புத்தகம் எண்ணிக்கை:162

புத்தகத்தின் பெயர் : சிதம்பர நினைவுகள் 

மலையாளத்தில் எழுதியவர் : பாலச்சந்திரன் கள்ளிக்காடு 

தமிழில் மொழி பெயர்த்தவர் :கே.வி .சைலஜா 

விலை : 200 

பக்கங்கள் : 184 

பதிப்பகம் : வம்சி புக்


கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

*மொழிபெயர்ப்பு நூல்களில் தமிழுக்கு கிடைத்த அரிய நூல்களில் ஒன்று சிதம்பர நினைவுகள் 

 

*சிதம்பர நினைவுகள் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல் ஆகும்.                              

 

*உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை உணர்ந்து கொள்ளும் வீதம் மொழிபெயர்க்க வேண்டும் அந்த வகையில் உணரும் வகையில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

 

*சிதம்பர நினைவுகள் புத்தகத்தை மொழிபெயர்க்கவே பேச மட்டும் தெரிந்த தாய் மொழியான மலையாளத்தை வாசிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டவர் கே.வி சைலஜா

 

* மலையாளத்தை வாசிக்க கற்றுக் கொண்ட பிறகு அவர் மொழிபெயர்த்து எழுதிய நூல் இது ஆகும் 

 

*சிதம்பர நினைவுகள் தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஏராளம் இந்த நூலில் இருந்து ஒரு பகுதி 12 ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது இதுவே இதற்குச் சான்றாகும்

 

*மலையாளத்தில் "சிதம்பர ஸ்மரண"என்று எழுதப்பட்ட நூல் எழுதியவர் பாலச்சந்திரன் கள்ளிக்காடு 

 

* சிதம்பர நினைவுகள் கவிதை நூல் அல்ல கவிதையை போல் வாழ்ந்த ஒரு கவிஞனின் உண்மையான வாழ்க்கை நிகழ்வுகளை வெளிக்காட்டிய நூல்

 

*ஒரு மனிதனுக்குள் இரண்டு வித குணங்கள் உள்ளது அந்த இரண்டு வித குணங்களையும் இந்த கவிதை நூல் வெளிக்காட்டுகிறது 

 

*மனிதனில் 

கலந்துள்ள

கடவுள் பாதி

மிருகம் பாதி கலந்த கலவையை உணர்த்தும் நூல்.

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments