மாபெரும் சபைதனில் ஆசிரியர் :உதயச்சந்திரன்


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:154

தேதி:27-12-2022

புத்தகம் எண்ணிக்கை:154

புத்தகத்தின் பெயர்: மாபெரும் சபைதனில்

ஆசிரியர் :உதயச்சந்திரன்

விலை :390

பக்கங்கள் :344

பதிப்பகம் :ஆனந்த விகடன்


கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

*ஒருவர் தான் ஈடுபட்டுள்ள துறையில் தான் மேற்கொண்டுள்ள பணியில் சிறந்த விளங்க தனக்குரிய வேலையை மிகச் சிறப்பாக செய்து முடிக்க தூண்டுகோலாக அமைய இந்த புத்தகம் ஒரு சிறந்த புத்தகம்

 

*கல்வியாளர், சிந்தனையாளர் ,முன்னாள் கல்வித்துறை செயலர் உதயசந்திரன் அவர்கள் எழுதிய அவரின் வாழ்க்கை வாழ்க்கை அனுபவமே மாபெரும் சபைதனில் என்ற இந்த புத்தகமாகும்

 

*ஒரு புத்தகம் படிக்கும்போது பல்வேறு புத்தகங்களை படிக்க தூண்டுவது இந்த புத்தகம் மட்டுமே

 

*உதயசந்திரன் அவர்களின் மாபெரும் சபைதனில் என்ற புத்தகத்தில் சபை குறிப்பு என்று ஒவ்வொரு தலைப்புக்கும் இடையே நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்

 

*அந்த புத்தகங்களை தேடித்தேடி படிக்க ஆர்வமூட்டுகிறது

 

*ஒரு புத்தகம் படிக்கும் போது பல்வேறு திரைப்படங்களை பார்க்க தூண்டுவதும் இவரின் புத்தகம் மட்டுமே

 

*இந்த நூலின் முதல் பக்கமே இவரின் தாய் மீது கொண்ட நேசம் வெளிப்படுகிறது "இந்த நூல் சுவாசிக்கவும் வாசிக்கவும் கற்றுக் கொடுத்த அம்மாவுக்கு "என்று தொடங்குகிறார்

 

*இந்த நூல் மொத்தம் 40 தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது

 

*எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு "பட்டாம்பூச்சியின் விளைவு" எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி உதயச்சந்திரன் அவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அவருக்கு கிடைக்கும் பெருமைகளையும் பாராட்டுகளையும் பார்த்துவிட்டு தன் வாழ்வில்  கலெக்டர் ஆக வேண்டும் என்று லட்சியத்தை எடுத்துக் கொண்டார் பின்னாளில் அவரும் ஐஏஎஸ் தேர்வு தேர்ச்சி பெற்றுள்ளார் அதை இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் அந்த மாணவியின் பெயர் வான்மதி

 

*இந்த புத்தகம் முழுக்க தன்னுடைய பணிக்காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை தான் எதிர்கொண்ட சிக்கல்களையும்  இடர்பாடுகளையும் தனக்கு ஏற்பட்ட புதிய படிப்பினைகளை கட்டுரைகளாக அமைத்துள்ளார்

 

*கீழடி பற்றி இவர் கூறியுள்ள தகவல்கள் தமிழரின் பெருமையை உலகிற்கு உணர்த்துகிறது

 

*இந்த கட்டுரைகளில் இவர் சந்தித்த வித்தியாசமான மனிதர்களை அழகாக மையப்படுத்தி அவர்கள் பணிகளை சிறப்பித்து இந்த கட்டுரைகளில் நினைவு கூர்ந்து உள்ளார் இந்த புத்தகத்தை படிக்கும்போது ஒரு ஆய்வுக் கட்டுரை படிப்பதை போல் உள்ளது

 

*ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்குள்ள பொறுப்புகளையும் பணிகளையும் உணர்ந்து கொள்ள முடிகிறது

 

*தமிழக பாடநூல்களை உருவாக்கும் போது நல்ல தரத்தோடு உருவாக்குவதற்கு இவர் எடுத்துக் கொண்ட சிரமங்களையும் பணிகளையும் இந்த புத்தகத்தை படிக்கும் போது புரிகிறது

 

*வெற்றி பெறும் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு புதிய செய்தியை குறிப்பால் உணர்த்துகிறது

 

* 50 ஆண்டுகால தமிழ் திரை உலகில் முத்திரை படித்த சில படங்களை குறிப்பிட்டுள்ளார் மொத்தம் 17 படங்களை பட்டியலில் உள்ளார் .அந்த பட்டியலை பார்க்கும்போது அந்தப் படங்களையும் நம்மை பார்க்கத் தூண்டுகிறது .

 

*நம்பிக்கையும் நம்பகத் தன்மையும் நாணயத்தின் இரு பக்கங்கள்

 

*மன்னிப்பும் பெருந்தன்மையும் மிகச் சிறந்த ஆயுதங்கள்

 

*ஏறுதழுவுதல் நிகழ்வை உயிருக்குயிராய் நேசிப்பவரும் விலங்கு நலன் கருதி எதிர்ப்பவரும் தவிர்க்க இயலாமல் வியந்து பார்ப்பது ஒன்றைத்தான் அது தமிழினத்தின் தொன்மையும் தொடர்ச்சியும்

 

*மாபெரும் காவியங்களை விட கதை பாடல்களும் பழமொழிகளும் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இணைந்து உறவு உறவாடுகின்றன

 

*என் அலுவல் பயணத்தில் அவ்வப்போது விபத்துக்களை சந்தித்து விழும்போதெல்லாம் என் அம்மாவிடம் இருந்து அலைபேசியில் அடிக்கடி ஒலிக்கும் வாசகம் "செடி கொடிகள் காற்றுக்கு அசைவதுண்டு கற்பாதைகள் அசைவதில்லை "

 

*வானவில் என்பது நிறங்களின் அணிவகுப்பு அது பழமையும் குறியீடு நிறங்கள் பல உருவாகி உருவாகும் வண்ணச் சாரல்தான் நமது நவீன அடையாளம்

 

*மரம் வெட்டிய கோடரி

பார்த்துக்கொள்

கடைசி மழைத்துளி ....!

 

*அரசு ஊழியர் என்பதை விட பொது ஊழியர் என்பதே சரியானது என்கிறேன்.

 

*இந்தப்புத்தகம் கண்டிப்பாக மாணவர்கள்,இளைஞர்கள்,ஆசிரியர், அரசு ஊழியர்கள் படிக்க வேண்டிய பொக்கிசம்.

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301


Post a Comment

0 Comments