ரோசா பார்க் ஆசிரியர் :மா.லைலா தேவி மற்றும் ச.மாடசாமி




*தினம் ஒரு புத்தகம்*

நாள்:156

தேதி:29-12-2022

புத்தகம் எண்ணிக்கை:156

புத்தகத்தின் பெயர் :ரோசா பார்க் 

ஆசிரியர் :மா.லைலா தேவி மற்றும் ச.மாடசாமி 

பக்கங்கள் :64 

விலை :50 

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் 


கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


 

*அமெரிக்க கருப்பின மக்களின் மகத்தான தலைவர்களில் ஒருவரான ரோசா பார்க் அவர்களைப் பற்றிய எளிய உணர்ச்சிகரமான அறிமுகமாக இந்த சிறு நூல் அமைந்துள்ளது 

 

*வெள்ளை அகம்பாவத்தின் காலடியில் சிக்கிச்சிதைந்து கொண்டிருந்த கருப்பின மக்களின் விடுதலைக்கான போராட்ட வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்ட ரோசாபார்க்கின்  வாழ்வின் சில கொந்தளிப்பான பக்கங்களை அழகாய் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது.

 

*இந்த நூல் மொத்தம் 12 பகுதிகளை உடையது 

 

*எனக்குப்பிடித்த பகுதி "வெற்றியை நோக்கி" என்னும் பகுதியாகும்.

 

*எனக்கு வயது 42 தான் உடலாலும் மனதாலும் நான் களைத்துப் போகவில்லை விட்டுக்கொடுத்து விட்டுக் கொடுத்துதான் நான் கலைத்துப் போனேன் என்று ரோசாப்பார்க் கூறிய வார்த்தை வரலாற்றையேத்திருப்பி போட்டது.

 

*வெற்றி எப்போதும் கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பதில்லை

 

* வெற்றியை அடைவதும் எளிதல்ல நியாயமான வெற்றிகள் எப்போதும் தடைகளைச் சந்திக்கின்றன 

 

*தனது இடைவிடாத போராட்டமூலம் பஸ்களில் பாகுபாடு தவறானது என்று நீதிமன்ற தீர்ப்பு பெற்றார் ரோசாப்பார்க் 

 

*கருப்பர்கள் கொண்டாடிய தீர்ப்பு பஸ்ஸில் கருப்பர்களும் அமர்ந்து செல்லலாம் என்பதே ஆகும்.

 

* ரோசா தனது வாழ்க்கை வரலாற்றை 79 வயதில் மை ஸ்டோரி (My Story) என்ற தலைப்பில் எழுதினார்.

 

* அமைதி ,ஒற்றுமை ,அன்பு கொண்டு மக்கள் அனைவரும் சேர்ந்து வாழும் காலம் குறித்த கனவோடும் ஆசையோடும் ரோசா தன் சுயசரிதையை முடிக்கிறார் 

 

*உட்கார்ந்திருப்பது என்பது வெகு சாதாரணமான நிகழ்ச்சி ரோசாப்பார்க்கில் இன் இந்த சிறு நிகழ்ச்சியை சரித்திரம் ஆக்கினார் 

 

*92 வயதில் இறந்தார் முதலில் வெள்ளையர்களால் புறக்கணிக்கப்பட்ட ரோசா இறந்த பிறகு ஜனாதிபதிகளுக்கு அளிக்கக்கூடிய இறுதி மரியாதையைஅமெரிக்க தேசம் வழங்கியது 

 

*எழுச்சிமிக்க இருபதாம் நூற்றாண்டு பெண் என்று ரோசாவை அமெரிக்க அதிபர் புஷ் புகழ்ந்தார்.

 

* ரோசா பயணம் செய்த பேருந்து இன்று வரை டெட்ராய்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது 

 

*சிந்தனை தளம் ,செயல்பாட்டு தளம் ஆகிய இரு தளங்களிலும் விவாதித்து கற்க வேண்டிய வாழ்க்கையாக ரோசாவின் வாழ்க்கை இருக்கிறது 

 

*கருப்பின பெண்ணாக பிறந்தது தவறில்லை என்று தனது உரிமைக்காகவும் உணர்வுக்காகவும் போராடி தனது உரிமைகளை பெற்றது அனைவருக்கும் ஒரு படிப்பினை ஆகும் 

 

*போராடினால் உண்டு பொற்காலம் போராட்டமே விடியலுக்கு வழி என்பதை ரோசாவின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது 

 

*இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் பெண்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது ஆகும்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments