*தினம் ஒரு புத்தகம்*
நாள்:155
தேதி:28-12-2022
புத்தகம் எண்ணிக்கை:155
புத்தகத்தின் பெயர்: அன்பு என்பது ஒரு தந்திரம்
அல்ல
ஆசிரியர் :ச.மாடசாமி
விலை :70
பக்கங்கள் :72
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்.
*பேராசிரியர் ச. மாடசாமியின் இந்தப் புத்தகம்
மொத்தம் 12 கட்டுரைகளை உள்ளடக்கியது
*பள்ளிக்குப் பெருமை ரிசல்ட் அல்ல அன்பின்
மையங்களை உருவாக்கும் ஆசிரியர்கள் தான்
*மாணவர்களுக்குள் பல்வேறு முகங்கள் உள்ளன
ஆசிரியர்கள் தான் அந்த முகத்தை அடையாளம் காண மறந்து விடுகின்றனர் அடையாளம் கண்டால்
அந்த மாணவன் வாழ்வில் சிகரத்தை தொட்டு விடுவான்
*சடங்குகள் சூழ்ந்த வகுப்பறை ,விவாதங்கள்
நிறைந்த வகுப்பறையாக மாற வேண்டும் ஆசிரியர் நினைத்தால் முடியாதது எது?
*தலைகீழ் வகுப்பறை அல்லது மறுபுறம்
திருப்பப்பட்ட வகுப்பறையை கண்டுபிடித்தவர்கள் ஜோதைன் பெர்க்மமேன் மற்றும் ஆரன்
சாம்ஸ் என்ற இரு அமெரிக்கப் பள்ளி ஆசிரியர்கள்
*ஆசிரியர்கள் கோபம் கொண்ட மாணவர்களோடு தயவு
செய்து கைகுலுக்குங்கள் ,கண்டித்த மாணவர்களை அழைத்து தோளைத்தட்டிக் கொடுங்கள்
வகுப்பறையில் நட்பை மலர வைப்பதற்காக தோற்றுப் போங்கள் தோற்பதற்கு
கூச்சப்படாதவர்கள் தான் உண்மையான வீரர்கள் உண்மையான ஆசிரியர்கள்
*ஒரு செயலை முடிக்கும் தருணம் கடினமானது மற்றும்
முக்கியமானது ஆகும்
*கேரளாவில் பள்ளிகள் திறக்கும் நாளில்
குழந்தைகளை வரவேற்க வாசிக்கும் பாடல்
"வாகை மரங்கள் பூத்த வசந்த காலம் பள்ளிக்கூட காலம் வண்ணத்துப்பூச்சிகள் தோப்பு
நிறைய பறக்கும் பட்டுப்பூச்சி காலம் "
*குழந்தைகளின் உலகங்கள் உயிர் பெற தொழில்நுட்பம்
மட்டும் போதாது பாடப்புத்தகம் மட்டும் போதாது உள்ளமும் உணர்வும் கனிந்த ஒரு
வகுப்பறை வேண்டும்
*உலகில் லட்சக்கணக்கில் பேனாக்கள் இருக்கின்றன
ஒவ்வொரு பேனாக்குள்ளும் லட்சக்கணக்கில் உலகங்கள் ஒளிந்து இருக்கின்றன அவற்றையெல்லாம்
வகுப்பறை வெளிக் கொண்டு வந்து விட்டதா?
என்ற கேள்வியை கிறிஸ்டோபஸ் மையர் எழுதிய
"என் பேனா" (My Pen)என்ற குழந்தை கதை எழுப்புகிறது
*"ஒரு மழைத்துளி போல் எளிமையானது பேனா
ஆனால் பேனாவின் பார்வை ஊடுருவும் எக்ஸ்ரே பார்வை ..!"
*தொடுதிரைக்கு ஆசைப்படும் வகுப்பறைகள்
பேனாக்களையும் பேனா பிடிக்கும் விரல்களையும் எவ்வளவு வளர்த்திருக்கின்றன என்பது
கேள்விக்குறிதான் ....?
*தடுமாறும் பிள்ளைகளோடு கைகோர்த்துக்கொண்டு
அவர்கள் வேகத்தில் ஆசிரியர்கள் நடந்து போனால் பயணமும் தித்திக்கும் ஒவ்வொரு
குழந்தைக்குள்ளும் உறைந்து கிடக்கும் உலகங்களும் உயிர்ப்பெறும் அதற்குத் தேவை
வகுப்பறைக்கு ஒரு மனித முகம்.
*திறமையானவர்கள், உண்மையானவர்களை விட நெளிவு
சுழிவு தெரிந்தவர்களே அன்றாட வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்
*செயல்படுவது தான் சுதந்திரம்
*ஆசிரியப் பணியில் சோர்வு ஏற்படும் போது மனம்
புத்துணர்வு ஏற்பட பேராசிரியர் ச. மாடசாமியின் புத்தகங்கள் உதவும்
*மாணவர் மைய ஆசிரியர்கள் தங்களை மென்மேலும்
செதுக்கிக் கொள்ள இந்தப்புத்தகம் கண்டிப்பாக உதவும்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments