ஆசிரியர் முகமூடி அகற்றி ஆசிரியர் : ச. மாடசாமி



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:182

தேதி:24-01-2023

புத்தகம் எண்ணிக்கை:182    

புத்தகத்தின் பெயர் : ஆசிரியர் முகமூடி அகற்றி 

ஆசிரியர் : ச. மாடசாமி 

பக்கங்கள் : 72 

விலை : 50 

பதிப்பகம் :அறிவியல் வெளியீடு 


கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


*அமெரிக்காவில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர்  பிராங்க் மக்கோர்ட்  ஆங்கில ஆசிரியர் அவரின் வகுப்பறை அனுபவமே இந்த புத்தகம் 

 

*மக்கோர்ட் வகுப்பறை அனுபவங்கள் வித்தியாசமானவை மாணவர் ஒவ்வொருவரும் உரையாடலில் பங்கேற்கும் விதமாக எப்போதும் வகுப்பறையை மக்கோர்ட் திறந்து வைத்திருப்பார் 

 

* மக்கோர்ட் எழுதிய டீச்சர் மேன் நூலின் வாசிப்பு அனுபவம் இந்த நூல் 

 

*மொழிபெயர்ப்பு அல்ல 

 

 *இந்த நூலில் மனதைத்தொட்ட வரிகள்* 

 

*"தாமதமாய் மலர்ந்தவன்" என்று மக்கோர்ட் தன்னைப் பற்றி சொல்லிக் கொள்வார்.

 

*தன் பணிக்காலம் முழுவதும்'ஆசிரிய முகமூடி'யைக் கழற்ற ஓயாமல் முயன்றவர் மக்கோர்ட்.

 

*பணி ஒய்வு பெற்றதும் முகமூடி அநேகமாக கழன்று விட்டது. இப்போது என்னால் மூச்சு விட முடிகிறது என்று எழுதினார் மக்கோர்ட்.

 

*"நீ அவர்களைப் பார்த்துக் கத்தினாலோ, திட்டினாலோ அவர்களை இழக்கிறாய். உன் சத்தத்துக்குப் பிறகு, சலனமற்று மௌனமாய் அவர்கள் வகுப்பறையில் உட்கார்ந்திருப்பது உன்னைத்திருப்பி அடிப்பது போல. வகுப்பறை அத்துடன் முடிந்துவிட்டது."

 

*"மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைக்க ஆசிரியரிடம் என்ன இருக்கிறது? பிரம்பா? துப்பாக்கியா? ஆசிரியரிடம் இருப்பது வாய் மட்டுமே"

 

*ஒவ்வொரு வருடம் முடியும் போதும் அந்த வகுப்பறையில் நிச்சயம் ஒருவனாவது ஏதோ சிலவற்றைக் கற்றுக் கொள்கிறான்.அந்த ஒருவன் நான்தான்

 

* எழுத்து நடை மட்டுமல்ல மக்கோர்ட் எழுதத் தொடங்கிய விதமும் வித்தியாசமானது தான் வயது 60 தாண்டிய பிறகுதான் அவருக்கு நூல் எழுதுவதில் ஆர்வம் பிறக்கிறது அதற்கு முன்னால் ஒரு கட்டுரையை கூட அவர் எழுதியதில்லை

 

* எழுத ஏன் இவ்வளவு தாமதம் ?என்ற கேள்வி வந்தபோது என்ன செய்ய இத்தனை ஆண்டுகளாய் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன் பாடம் நடத்தும் போது வேறு எதைச் செய்ய முடியும் என்று பதில் சொன்னவர் மக்கோர்ட்

 

*வகுப்பறை ஆனாலும் சரி படுக்கை அறையானாலும் சரி உள்ளது உள்ளபடி வெளிப்படையாக எழுதுகிறார் மக்கோர்ட.

 

* இருப்பதைவிட சேர்ந்து கூடி முரண்பட்டு விவாதிப்பதே நல்லது 

 

*மக்கோர்ட்டின் பலம் என்ன ? சுய விமர்சனம் தான் மக்கோர்ட் பலம் வெற்றியின் போது இது சரியான வெற்றி தானா என தனக்குள் கேள்வி எழுப்புகிறார் தோல்வியின் போது இதில் தன் தவறு என்ன ?என்று தான் முதலில் தேடிப் பார்க்கிறார் 

 

*ஆசிரியர் பணி தம் லட்சியப் பணி என்றெல்லாம் மார்க்கெட் சொல்வதில்லை கிடைத்த பணி அவ்வளவுதான் 

 

*கதவை திறந்து நடப்பதற்கு வெளியே வந்து விட்டால் நீ சுதந்திரம் ஆகிறாய் கவலைகளும் பொறுப்புகளும் இல்லை புறப்பட இடத்திற்கு திரும்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை நடந்து கொண்டே இரு ஏனெனில் நீ சுதந்திரம் பெற்றிருக்கிறாய் 

 

*மன்னிப்பு கடிதம் எழுதுவதன் மூலம் மாணவர்களிடம் எழுத்தாற்றலை வளர்த்தவர்

 

*மாணவர்களுடன் தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டு அவர்களை நல்வழிப்படுத்தியவர்.

 

*மாணவர்களின் உள்ள உணர்வுகளைப் புரிந்துக்கொள்ள ஆசிரியர் என்ற நிலையில் இருந்து மாணவர்கள் நிலைக்கு வந்தால் மட்டுமே முடியும் என நிரூபித்தவர்

 

*மாணவர்கள் மைய ஆசிரியர்களும் குழந்தைகள் மைய பெற்றோர்களும் கண்டீப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது.

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments